கனடாவில் துப்பாக்கிப் பிரயோக சம்பவமொன்றில் தேடப்படும் நபராக தமிழ் இளைஞன் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ரொரன்ரோ பொலிசார், திலக்சன் ராஜ்குமார் (24) என்பவரை தேடுவதாக அறிவித்துள்ளனர்.
மே 15 அன்று ஸ்கார்பாரோவில் நிகழ்ந்த இரண்டு சிறிய ட்ரக்குகள் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் கண்காணிப்பு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.
கெனடி மற்றும் எல்லெஸ்மியர் வீதிகள் பகுதியில் ஒரு எரிவாயு நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. அதிகாலை 1:18 மணியளவில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.
எரிவாயு நிலையத்தில் 48 வயது நபர் ஒருவர் தனது காரை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, சிறிய ட்ரக்கில் வந்த இருவர் அந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிசார் குற்றம் சாட்டுகின்றனர்.
பொலிசார் வெள்ளிக்கிழமை வெளியிட்ட துப்பாக்கிச் சூட்டின் கண்காணிப்பு வீடியோவில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மனிதனின் வாகனத்தின் பின்புறம் மற்றும் ஓட்டுநரின் பக்க ஜன்னலையும் உடைப்பதாகத் தெரிகிறது.
எனினும், தமிழனின் துப்பாக்கிச்சூட்டில் 48 வயதான நபர் காயமடையவில்லை.
24 வயதான டொராண்டோவில் வசிக்கும் திலூக்ஷன் ராஜ்குமாரை பொலிசார் தேடி வருகின்றனர்.