தமிழக வீரரும், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஆடியவருமான வருண் சக்ரவர்த்தி, தன்னுடைய நீண்ட கால தோழியை திருமணம் செய்து கொண்டார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில், சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கலக்கியவர் வருண் சக்ரவர்த்தி. தமிழகத்தை சேர்ந்த, இவர் கொல்கத்தா அணிக்காக விளையாடினார்.
தனது மாயாஜாலா சிறப்பான சுழற் பந்து வீச்சின் மூலம் சர்வதேச அளவில் விளையாடிய அனுபவம் உள்ள துடுப்பாட்ட வீரர்களை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இதன் மூலம், இந்திய கிரிக்கெட் அணியிலும் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் அவுஸ்திரேலியாவிற்கான சுற்றுப்பயணத்தில் தெரிவு செய்யப்பட்டார்.
View this post on Instagram
ஆனால், காயம் காரணமாக அவரால் விளையாட முடியவில்லை, அவருக்கு பதிலாகவே நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் வருண் சக்ரவரத்தி, தனது நீண்ட நாள் தோழியை திருமணம் செய்து கொண்டார். சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அவரது திருமண படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



















