மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் காவல்த்துறைமா அதிபர் வாஸ் குணவர்தன கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளார். அவர் தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவர் இப்போது சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பம்பலப்பிட்டியில் ஒரு தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வாஸ் குணவர்தன உட்பட பலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.


















