தனது காதலனின் தாயாரின் மரணவீட்டில் கலந்து கொண்ட யுவதியொருவர், சடலத்தை கட்டியணைத்து கதறியழுதுள்ளார். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மரண வீட்டில் கலந்து கொண்ட 37 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர.
பாணந்துறை, பின்வல பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 66 வயதான பெண்ணொருவரே உயிரிழந்திருந்தார். மகனின் காதலியும் மரண வீட்டில் கலந்து கொண்டிருந்தார். மாமியாரின் உடலை கட்டியணைத்தும், வேறு சிலரை கட்டியணைத்தும் அவர் அழதிருந்தார்.
ஹெரணையிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் அவர் பணியாற்றுகிறார். கடந்த 9ஆம் திகதி மரணவீட்டிற்கு வந்திருந்தார்.
அந்த பகுதிக்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி அவரது பிசிஆர் மாதிரியை பெற்று சோதனையிட்டபோது, யுவதிக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து 37 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


















