டுபாயிலிருந்து செயற்படும் போதைப்பொருள் வர்த்தகர்கள் தொடர்பில் விசேட விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.
துபாயிலிருந்து வழிநடத்தப்படும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலைல் அவர்களில் ஒரு பெண்ணும் அடங்கியுள்ளார்.
கைதானவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
களனி பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அவர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் சந்தேக நபர்களின் வங்கிக் கணக்குகள் இணைய வழி மூலமான பணபரிமாறல் மற்றும் நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.


















