யாழ்.நல்லுார் பொது சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் கீழ் பணியாற்றும் குடும்பநல மருத்தவ மாதுவின் கணவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த குடும்பநல மருத்துவ மாது கூட்டங்கள் சிலவற்றில் கலந்துகொண்டதுடன், வேலை இடத்தில் பலருடன் பழகியுள்ளார்.
இந் நிலையில் நல்லுார் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் பணியாற்றும் பலருக்கும் நேற்றய தினம் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பீ.சி.ஆர் முடிவுகள் இன்று மாலை வெளியாகவுள்ளது.
இந்நிலையில் பாதகமான முடிவுகள் கிடைத்தால் நல்லுார் பொது சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை முடக்கப்படும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


















