குருணாகல், கோகரெல்ல பகுதியில் நூறு 5000 ரூபா போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய 22 மற்றும் 23 வயதுகளையுடைய இரு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இதேவேளை போலி நாணயம் அச்சிடல் மற்றும் அது தொடர்பான விடயங்களை அறிந்தால் 0112422176 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.



















