வெலிசறை சுவாச நோய்க்கான தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளர் ஒருவர் நேற்று மாலை தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து தப்பியோடிய கொரோனா நோயாளர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















