மஹர சிறைச்சாலையில் உயிரிழந்த கைதிகளில் நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வத்தளை நீதிமன்றத்திற்கு இன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலகத்தில் பதினொரு சிறைக் கைதிகள் கொல்லப்பட்டிருந்தனர்.
இவ்வாறு உயிரிழந்த கைதிகளில் நான்கு பேரின் மரணங்கள் துப்பாக்கிச் சூடு காரணமாக நிகழ்ந்துள்ளது என நிபுணர் குழுவினால் நடாத்தப்பட்ட பிரேதப் பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.


















