“பன்சகுல” என்று அழைக்கப்படும் இறுதிச்சடங்குகளை மேற்கொள்வதற்காக பௌத்தர்களுக்கு இருக்கும் உரிமைகள் ஏனைய அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்க மாலைத்தீவு தயாராக இருப்பதாக கூறிய ஊடக அறிக்கைகள் தொடர்பாகவே நளின் பண்டார தமது இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கொரோனாவினால் மரணமாகும் இலங்கை மக்களின் இறுதி சடங்குகளை உறுதி செய்வதற்கான ஒரு பொறிமுறையை அரசாங்கம் கொண்டு வர வேண்டும்.
கொரோனாவினால் காவுகொள்ளப்பட்ட பௌத்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் தமது உறவுகளுக்கு “பன்சகுல” சடங்குகளை மேற்கொள்ள முடியவில்லை என்று வருத்தப்படுகிறார்கள்.
கொரோனாவினால் காவுகொள்ளப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்காதது போன்றே இறந்து போகும் தமது உறவுகளுக்கு “பன்சகுல”’பாரம்பரியத்தை மேற்கொள்ள முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவும், கொரோனாவினால் காவுகொள்ளப்படுபவர்களின் இறுதி சடங்குகளைச் செய்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் கொரோனாவினால் காவுகொள்ளப்பட்டவர்களை அடக்கம் செய்வது சுகாதாரத்திற்கு ஆபத்தானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்


















