நல்லெண்ணெய் என்பது எள் என்னும் தானியத்திலிருந்து பெறப்படும் நெய்யாகும்.
பல ஊட்டச்சத்துக்கள் கொண்ட எள் தானியங்களை பயன்படுத்தி பல உணவு வகைகள் தயார் செய்து உண்ணப்படுகின்றன.
உலகெங்கிலும் இருக்கின்ற மக்கள் தங்களின் அன்றாட உணவு தயாரிப்பில் நல்லெண்ணெய் பயன்படுத்துகின்றனர்.
இந்த நல்லெண்ணெய் பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவதாலும் குடிப்பதனாலும் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகின்றது.
அந்தவகையில் நல்லெண்ணைய்யை தினமும் காலையில் வெறு வயிற்றில் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- நல்லெண்ணெய்யை தினமும் சிறிது நல்லெண்ணெய்யை வெறும் வயிற்றில் குடித்தால், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரையின் தாக்கம் குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.
- நல்லெண்ணெய்யை காலையில் வெறும் வயிற்றில் சிறிது குடித்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
- நல்லெண்ணெய்யில் லெசித்தின் என்னும் பொருளும், லினோலிக் என்னும் அமிலமும் இருப்பதால், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பைக் கரைத்து(LDL), நல்ல கொழுப்பின் (HDL)அளவை அதிகரிக்கும்.
- உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், நல்லெண்ணெயை சிறிது குடித்தால், உடல் வெப்பம் தணிந்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.
- நல்லெண்ணெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளதால், இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். குறிப்பாக நல்லெண்ணெய் குடிப்பதால், இரத்த அழுத்த மருந்துகளை நாளடைவில் குறைத்துவிடலாம்.
- மூட்டு வலிகளால் கஷ்டப்படுபவர்கள், நல்லெண்ணெய்யை உணவில் சேர்ப்பதன் மூலமோ அல்லது குடிப்பதன் மூலமோ குணப்படுத்தலாம்.
- நல்லெண்ணெய்யில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால், இந்த எண்ணெய்யைக் தினமும் காலையில் வாயில் சிறிது ஊற்றி, 10 நிமிடம் கொப்பளித்து, வர வேண்டும். இப்படி செய்து வந்தால், பல் வலி, ஈறு பிரச்சனைகள் போன்றவை நீங்கி வாய் ஆரோக்கியம் மேம்படும்.