கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உணவளிக்க UNICEF முதன்முறையாக பிரித்தானியாவில் உள்நாட்டு அவசரகால நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு மனிதாபிமான மற்றும் மேம்பாட்டு உதவிகளை வழங்குவதற்கான பொறுப்புடைய ஐ.நா. அமைப்பான UNICEF, இளைஞர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஏற்படுத்தியுள்ள விளைவை இரண்டாம் உலகப் போருடன் ஒப்பிட்டுள்ளது.
பிரித்தானியாவில் மார்ச் மாதத்தில் முதல் தேசிய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதிலிருந்து பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, பலர் வேலைகளை இழந்துவிட்டதால், நாட்டில் தேவைகளுக்குப் போதுமான அளவு பணம் மற்றும் உணவுகளை அணுகுவதற்கு போராடும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு மே மாதம், Food Foundation என்ற தொண்டு நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட YouGov நடத்திய ஆய்வில் , பிரித்தானியாவில் 2.4 மில்லியன் குழந்தைகள் (17%) உணவு பாதுகாப்பற்ற வீடுகளில் வசித்து வருவதாகக் கண்டறியப்பட்டது.
அக்டோபர் மாதத்திற்குள் கூடுதலாக 9,00,000 குழந்தைகள் இலவச பள்ளி உணவுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளனர் என YouGov தெரிவித்தது.
இந்நிலையில், இப்போது School Food Matters தொண்டு நிறுவனத்திற்கு 25,000 பவுண்ட் நிதியளிப்பதாக UNICEF உறுதியளித்துள்ளது.
School Food Matters தொண்டு நிறுவனம், லண்டனின் Southwark-ல் உள்ள பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு, இரண்டு வார கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களின் போது தேவையான ஆயிரக்கணக்கான காலை உணவு பெட்டிகளை வழங்கவுள்ளது.
இதற்கு UNICEF அளித்த நிதியை School Food Matters தொண்டு நிறுவனம் பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு உணவு பெட்டியிலும் கிறிஸ்துமஸ் விடுமுறை முழுவதும் போதுமானதாக 10 காலை உணவுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Today is the launch of our Xmas #BreakfastBoxes scheme & will support 1,800 #Southwark families at risk of food insecurity with nutritious breakfasts over the 2 week period @UNICEF_uk @FoodPowerUK @lb_southwark @SwkFoodAction @PremierFoods_FS @AbelandColehttps://t.co/6giGg0mYcn
— School Food Matters (@sfmtweet) December 16, 2020