நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என கோரி ஜேவிபி இன்று அமைதி வழி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
புத்தளம் நகரில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. தற்போதைய கொரோனா சூழ்நிலையில் மாணவர்கள் இணையம் மூலமான கல்விக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
எனினும் பெருமளவான மாணவர்கள் அதற்குரிய வசதிகளை பெற்றிருக்கவில்லை. இதன் காரணமாக அவர்களின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்காக அதிக செலவுகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
எனவே இந்த விடயத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதேவேளை இந்த கல்வி விடயத்தில் அரசாங்கம் உரிய பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் ஜேவிபியின் ஆர்ப்பாட்டத்தின் போது கோரப்பட்டிருக்கிறது.