vபொதுமக்கள் அனைவரும் தாம் வாழும் சமூகத்தில் அக்கறை கொண்டு தமது இயல்பு வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
கொரோனா உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இலங்கையிலும் அதனுடைய பாதிப்பு இருக்கிறது.
கொழும்பில் நாளாந்தம் எழுநூறு, எண்ணூறு எனப் புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
யாழில் நீண்ட காலத்திற்கு பின்னர் ஒரு தொகை தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எங்கள் மாவட்டத்தைப் பொறுத்தவரை இது அதிக தொகையாகக் காணப்படுவதால் மக்கள் மத்தியில் பய உணர்வு ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகள் உரிய கட்டுப்பாடுகளை விதித்து சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். மக்களும் தங்கள் இயல்பு வாழ்க்கையை நிச்சயமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.