உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று விசாரணை செய்யப்படவிருந்த அனைத்து வழக்குகளும் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
நேற்று மாலை நிலவரப்படி குற்றவியல் புலனாய்வுத் துறை 31 நபர்களிடமிருந்து அறிக்கைகளை பதிவு செய்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடமும் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
அரச பகுப்பாள்வாளர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மின் பொறியாளர்கள் தளத்தில் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.


















