எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு இந்தியா கோரியுள்ளது.
மீன்பிடி பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியாவும் இலங்கையும் மெய்நிகர் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க உள்ளன.
இதற்கான நல்லெண்ண செயற்படாக தமது மீனவர்களை விடுவிக்க இந்தியா கோரியுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
எனினும் இந்தவிடயத்தில் இந்தியா முதலில் நல்லெண்ணத்தைக் காட்ட வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்துவது இலங்கையில் மீன்பிடி வளங்களுக்கு தீங்கு விளைவிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.
இந்தநிலையில் இலங்கை கடலில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்டதாககூறி 36 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று முன்தினம் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.



















