இலங்கையில் வீதி விபத்துக்களினால் நேற்று 10 பேர் பலியனதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நாட்டில் நேற்று மாத்திரம் ஏற்பட்ட விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்தனர் அதேநேரம் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற விபத்துக்களில் காயமடைந்த மூவர் நேற்று வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தனர்.
இதனையடுத்தே நேற்றைய தினத்தில் விபத்துக்களினால் ஏற்பட்ட மரண எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.
இது கொரோனா தொற்றுக்கு முன்னதாக நாட்டில் நாளாந்த ஏற்பட்டு வந்த வீதி விபத்துக்களுக்கு நிகரான சம்பவங்களாகும் என்று அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் சாலை விதிகளை மீறும் ஓட்டுநர்களை கைது செய்வதற்காக வார இறுதியில், நாடு
முழுவதும் பொலிஸ் மற்றும் போக்குவரத்து பொலிஸாரினால் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.