வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நாட்டில் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கொழும்பு பகுதிக்கு மண்ல் கொண்டு செல்லும் கனரக வாகனங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புகையிரதத்தின் ஊடாக மண் கொண்டு செல்லும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது.
இதில் மட்டக்களப்பு புணாணை புகையிர நிலைய பகுதிகளில் இருந்து கொழும்புக்கு மணல் ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றது. இதன் மூலம் ஒரு தடவையில் 100 கியூப் மணல்கள் கொழும்புக்கு கொண்டு செல்லப்படுகின்றது.