கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் கூட் டணி வைத்தாலும், தமிழகத்தில் மாற்றம் ஏற்படாது என சீமான் தெரி வித்தார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில், ரஜினியும் கமல்ஹாசனும் கூட் டணி வைத்தாலும், தமிழகத்தில் ஒரு மாற்றமும் ஏற்படாது.
இதனால், மற்ற கட்சிகளின் வாக்குகள் எதுவும் பிரியாது. மாற்றத்தை விரும்பி வரும் புதிய இளைய தலைமுறை வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்கின்றனர் என்பதைத் தான் பார்க்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சி கூட்டணி குறித்து கேட்கிறீர்கள், எங்கள் கட்சி எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காது. நாங்கள் ஏற்கெனவே வேட்பாளரை அறிவித்து வேலை செய்துவருகிறோம்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களில் ஒரு நன்மைகூட கிடையாது. இது சரியான சட்டம் என்றால், விவசாயிகள் எதற்காகப் போராட வேண்டும்.
இது விவசாயிகளின் பிரச்சினை மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடிமக்களின் பிரச்சினை என கூறியுள்ளார்.