மிஸ் இங்கிலாந்து பட்டம் பெற்ற ஒருவர், கொரோனாவுக்கெதிரான போராட்டத்தில் களமிறங்கி ஹீரோவாக செயல்பட்டு வருகிறார்.
உலகில் அழகிப்பட்டம் பெற்ற எந்த பெண்ணும், பொதுவாக நீச்சல் உடைகளுடன் அழகழகாக போஸ் கொடுப்பார்கள், அழகு சாதனங்களுக்கு விளம்பர மொடலாக வருவார்கள், நல்லெண்ண தூதுவராக உலகம் சுற்றி வருவார்கள், இல்லையென்றால் சினிமாவில் ஹீரோயினாவார்கள்.
ஆனால், மிஸ் இங்கிலாந்து பட்டம் பெற்றவரான Dr Carina Tyrrell (31), அதையெல்லாம் தூக்கிக் கடாசிவிட்டு, நிஜ ஹீரோவாக கொரோனாவுக்கெதிரான போராட்டத்தில் களமிறங்கியுள்ளார்.
உலகிலேயே கொரோனாவுக்கெதிராக மக்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கியுள்ள முதல் நாடு பிரித்தானியா என்ற பெருமையை பெற்றுத்தந்த அறிவியளாளராக சாதித்திருக்கிறார் Carina.
பிரித்தானியாவிலுள்ள அனைத்து இன, அனைத்து வயதினரான, பலதரப்பட்ட குடிமக்களுக்கும் இந்த தடுப்பூசி பாதுகாப்பானதுதானா என்பதை உறுதி செய்யும் ஆக்ஸ்போர்டு குழுவில் ஒருவராக முக்கிய பங்காற்றியுள்ளார் Carina.
உலகம் முழுவதிலுமுள்ள அறிவியலாளர்கள் மற்றும் மருத்துவர்களுடன் ஒன்றிணைந்து செயல்பட்டு, சரியான தடுப்பூசி சோதனைகளுக்கு, சரியான நிதியுதவி கிடைக்கிறதா என்பதையும் உறுதி செய்வது Carinaவின் பணியாகும்.
உலகம் முழுவதிலும் தயாராகும் அனைத்து தடுப்பூசிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து எது மிகப் பொருத்தமான தடுப்பூசி என்பதைக் கண்டறியும் பணியிலும் Carina ஈடுபட்டார்.
Pfizer, Moderna மற்றும் Oxford AstraZeneca தடுப்பூசிகள் தொடர்பில் Carinaவின் குழு பணியாற்றியது.
Dr Carina Tyrrell MA MB BChir MPH, என்ற பல பட்டங்களுக்கு சொந்தக்காரரால், அன்று உலக அழகிப்போட்டியில் நான்காவதாகத்தான் வரமுடிந்தது. ஆனால், இன்று அவர் நாட்டிலேயே அதிக புத்திசாலிகளில் ஒருவர் என இந்த இளவயதிலேயே பாராட்டப்படுகிறார். உலக அழகிப் பட்டம் பெறாவிட்டாலும் Carina உலக அழகிதான்!