பிறந்து 46 நாட்களேயான குழந்தையொன்று கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளது. கொழும்பு, சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில நேற்று இந்த மரணம் பதிவாகியது.
கொரோனாவினால் இலங்கையில் உயிரிழக்கும் இரண்டாவது மிக இளைய குழந்தை இதுவாகும்.
டிசம்பர் 8ஆம் திகதி இதே வைத்தியசாலையில், 20 நாளான பச்சிளங் குழந்தை உயிரிழந்தது.
குழந்தையின் சடலம் நேற்று மாலையே பொரளை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.