நாட்டில் நேற்று 662 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம் நாட்டின் தொற்றாளர்கள் எண்ணிக்கை 36,000 ஐ கடந்தது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 660 பேர் பேலியகொட- மினுவாங்கொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். இரண்டுபேர் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்கள்.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 502 பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். கொழும்பில் இருந்து 259 பேரும், களுத்துறையில் இருந்து 164 பேரும், கம்பஹாவிலிருந்து 79 பேரும் கண்டறியப்பட்டனர்.
கொழும்பில் புளூமெண்டலை சேர்ந்த 44 பேர், தெமடகொடாவைச் சேர்ந்த 33 பேர், புதுக்கடையை சேர்ந்த 25 பேர், பொரளையை சேர்ந்த 22 பேர், மட்டக்குளியிலிருந்து 21 பேர், வெள்ளவத்தையை சேர்ந்த 19 பேர், கொம்பனி தெருவை சேர்ந்த 19, மருதானையிலிருந்து 14 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
கண்டி மாவட்டத்தில் இருந்து 46 பேரும், மாத்தறை மாவட்டத்திருந்து 26 பேரும், காலி மாவட்டத்தில் இருந்து 18 பேரும், குருநாகல் மற்றும் இரத்னபுரி மாவட்டங்களில் இருந்து தலா 16 பேரும் காணப்பட்டுள்ளனர்.
இதுதவிர யாழ்ப்பாணம்உள்ளிட்ட ஏனைய 10 மாவட்டங்களில் இருந்தும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் கொழும்பு மாவட்டத்திலிருந்து 15,624 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். கம்பஹா மாவட்டத்திலிருந்து 8,083 பேரும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 2,448 பேரும், கண்டி மாவட்டத்திலிருந்து 1,273 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.



















