யாழ்.உரும்பிராயில் மருத்துவரின் குடும்பம் உட்பட 17 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
யாழ்.திருநெல்வேலி சந்தையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபரினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக உரும்பிராயில் 17 குடும்பங்களை சேர்ந்த 70ற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
குறித்த தொற்றாளர் உரும்பிராய் மருத்துவர் ஒருவர் தனது வீட்டில் நடத்திவரும் கிளினிக்கிற்கும் சென்றுவந்த நிலையில் மருத்துவரின் குடும்பம் உட்பட 17 குடும்பங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
மேலும் தொற்றாளராக இனங்காணப்பட்ட குறித்த நபருக்கு மருதனார்மடத்திலும் வர்த்தக நிலையம் ஒன்று உள்ளதாக கூறப்படுகின்றது.


















