மட்டக்களப்பு மாவட்டத்தின் மீராவோடை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை (19) காலை இடம் பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
உழவு இயந்திரம் மீராவோடை பகுதியில் இருந்து கறுவாக்கேணி நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த பட்டா வாகனத்திற்கு இடம் கொடுத்த சந்தர்ப்பத்தில் உழவு இயந்திரத்திற்கு பின்னால் வந்த மோட்டர் சைக்கிள் உழவு இயந்திரத்தை முந்திச் செல்வதற்கு முயற்சித்த போதே உழவு இயந்திரத்தில் மோதுண்டதிலயே இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த வாழைச்சேனை விநாயகர்புரம் பகுதியைச் சேர்ந்த தந்தையும் மகனுமே முன்னால் சென்ற உழவு இயந்திரத்தில் மோதுண்டதில் ஜெயசீலன் கிரிஜன் (18) என்பவர் ஸ்தலத்திலயே மரணமடைந்துள்ளதுடன் தந்தையான சிவப்பிரகாசன் ஜெயசீலன் என்பவர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பபு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.