பண்டிகை காலப்பகுதியில் பயண கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் எதிர்வரும் நத்தார் பண்டிகை காலப்பகுதியில் கொரோனா பரவலை தடுப்பது தொடர்பில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் போது வார இறுதியில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவதனை முடிந்தஅளவு குறைத்துக் கொள்ளுங்கள் என இராணுவ தளபதி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயணக்கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.