நேற்று மேலும் ஆறு கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் இலங்கையில் கொரோனா வைரஸால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்தது.
நேற்று பதிவான மரணங்கள் அனைத்தும் மேல் மாகாணத்திலிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மரணித்தவர்கள் விபரம்-
கொழும்பு -14 ஐச் சேர்ந்த 39 வயது பெண், கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து மாற்றப்பட்ட பின்னர் நேற்று தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தில் மரணமானார். மரணத்திற்கான காரணம், இரத்த விஷம், பல உறுப்பு செயலிழப்பு மற்றும் COVID-19 என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீரகுலவைச் சேர்ந்த 68 வயது ஆண். வாதுபிட்டிவால அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் மரணித்தார். COVID-19 தொடர்பான மார்பு தொற்று காரணமாக அவர் மரணித்தார்.
கொழும்பு -10 ஐச் சேர்ந்த 76 வயது ஆண் COVID-19 நிமோனியா காரணமாக டிசம்பர் 17 ஆம் திகதி கொழும்பு தேசிய மருத்துவமனையில் மரணமானார்.
கொழும்பு -15 ஐச் சேர்ந்த 77 வயது ஆண், டிசம்பர் 17 ஆம் திகதி கொழும்பு தேசிய மருத்துவமனையில் மரணமானார். மரணத்துக்கான காரணம் இரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிகள் மற்றும் COVID-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டாரகமவைச் சேர்ந்த 83 வயது பெண் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டவர் மாரடைப்பால் அவர் நேற்று முன்தினம் இல்லத்தில் மரணமானார்.
கிரிவத்துதுவவைச் சேர்ந்த 88 வயதுடைய பெண் COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட பின்னர் மாரடைப்பு காரணமாக அவர் நேற்று முன்தினம் தனது இல்லத்தில் மரணமானார் என்று அரசு தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.