காலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பின்னர் குணமடைந்து வீடு திரும்பிய நபர் உயிரிழந்துள்ளார்.
வீடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 76 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என காலி பொலிஸார் தெரிவித்துள்ளனனர்.
அவர் தலாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவராகும். அவர் நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டில் ஒரே இடத்தில் இருந்தவராகும்.
கடந்த4 6ஆம் திகதி இந்த நபர் கொரோனா தொற்றுக்குள்ளாகிய பின்னர் கரன்தெனிய கொரோனா வைத்திய சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நபர் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நபர் 17ஆம் திகதி வீடு திரும்பியுள்ளார்.
வீட்டில் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர் திடீரென உயிரிழந்துள்ளளார் என குறிப்பிடப்படுகின்றது.
உயிரிழந்த நபருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக காலிஸ் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.