இலங்கையின் வானிலையில் இன்று வடக்கு, கிழக்கு, வட-மத்திய, மத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில நேரங்களில் மழைபெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை எதிர்வு கூறியுள்ளது.
பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஏனைய இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று திணைக்களம் கூறியுள்ளது.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களிலும், பொலன்னறுவ, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான கனமான மழைவீழ்ச்சியை எதிர்பார்க்கலாம்.
மத்திய மலைநாடு, வடக்கு, வட-மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களின் கிழக்கு சரிவுகளிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 50கிலோமீற்றர் வேகத்தில் மிகவும் வலுவான காற்று வீசக்கூடும்.
கடல் பகுதியில் கொழும்பிலிருந்து காலி வரையிலும் காங்கேசந்துறையில் இருந்து,திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வழியாகக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 50முதல் 60 வரையிலான கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.




















