கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 370 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
பேலியகொட கொத்தணியில் இருந்து 364 பேரும், வெளிநாட்டில் இருந்து வந்த ஆறு பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றிரவு 10.45 மணிக்கு அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இலங்கையில் இதுவரையில் 37,631 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 8,773 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 433 பேர் வைத்தியசாலைகளில் கொரோனா சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா தொற்றினால் இலங்கையில் 176 பேர் உயிரிழந்ததாகவும், ஜனவரி மாதம் நாட்டில் கண்டறியப்பட்ட முதல் கொரோனா தொற்றாளரான சீன சுற்றுலா பயணி உள்ளிட்ட 28,682 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, பெப்ரவரி 18ம் திகதி முதல் டிசம்பர் 20ம் திகதி வரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய மொத்தம் 1,113,199 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.


















