மினுவாங்கொட ஆடை தொழிற்சாலை கொத்தணியிலிருந்து கண்டறியப்பட்ட அனைத்து கொரோனா தொற்றாளர்களும் முழுமையாக குணமடைந்துள்ளனர் என்று COVID-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் (NOCPCO) தெரிவித்துள்ளது.
மினுவங்கொட கொத்தணியிலிருந்தும், பேலியகொட மீன் சந்தை கொத்தணியிலிருந்தும் 33,950 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மினுவாங்கொட (3,059) மற்றும் மீன் சந்தை (30,891) கொத்தணிகளிலிருந்து 25,274 பேர் முழுமையாக குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை நேற்று 29,000 ஐ தாண்டியது.
தொற்றுநோயியல் பிரிவின் புள்ளிவிவரங்களின்படி, இதுவரை 29,300 பேர் குணமடைந்து வெளியேறியுளள்னர். நேற்று 618 பேர் குணமடைந்தனர்.
நாட்டில் இதுவரை 37,631 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதல், 8,150 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.


















