மாத்தளை ஹிக்கொல்ல மாவத்தை பகுதியில் இன்று (23) காலை முதல் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை நகரசபையின் பதில் முதல்வர் சந்தனம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
மாத்தளை நகரசபை பகுதியில் 19 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 6 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
மாத்தளை நகரசபை சுகாதார பணியாளர்கள் குடியிருப்பு பகுதியிலேயே தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து, அவர்கள் குடியிருக்கும் ஹிக்கொல்ல மாவத்தை பகுதியில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
நகரத்தின் சுகாதார பணியாளர்களின் குடியிருப்பு பகுதி தனிமைப்படுத்தப்பட்டதையடுத்து, நகரத்தில் குப்பைகளை சேகரிப்பது குறித்த பிரச்சினை எழுந்துள்ளதுடன், நகர மக்கள் குப்பைகளை இரண்டு வாரங்களுக்குள் அகற்றுவதில் வேறு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், நகரத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை அப்புறப்படுத்தும் முறை குறித்து விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


















