பாணந்துறையில் இயங்கும் ஆடைத்தொழிற்சாலையொன்றில் 80 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அந்த ஆடைத் தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகளின் பணிப்பாளர் மருத்துவர் உதய ரத்நாயக்க இந்த பரிந்துரையை சுகாதார அமைச்சகத்திற்கு முன்வைத்துள்ளார்.
இந்த தொழிற்சாலையில் 1500 இற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பெண் ணொரு வருக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக மேற் கொள்ளப் பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் குறித்த பெண் கொ ரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார்.
இந்நிலையில், குறித்த ஆடைத் தொழிற்சாலையில் கடமை யாற்றும் ஏனைய ஊழியர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதன்போது 80 பேர் கொரோனா தொற்றாளராக அடை யாளம் காணப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
‘கொவிட் 19’ ஆல் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கொக்கலவில் உள்ள கிரியுல்ல சிகிச்சை மையங்களில் வைத்து சிகிச்சையளிக்கப்படுவார்கள் என சுகாதார மருத்துவ அதிகாரி (எம்ஓஎச்) தெரிவித்தார்.



















