யாழில் இருந்து வெளியாகும் உதயன் பத்திரிகைக்கு எதிராக யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளில் அன்று அவரது புகைப்படம், சொற்களை பாவித்தமை, 1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு உட்பட்டு தண்டனைக்குரிய குற்றமென, யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதால், சந்தேகநபர் தொடர்பில் மன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
2021 மார்ச் 21ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



















