நாட்டில் நேற்று 580 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,639 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 507 பேர் மினுவங்கொட- பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 72 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவரும் அடையாளம் காணப்பட்டார்.
மினுவாங்கொட – பேலியகொட கொரோனா இரட்டை கொத்தணியில் அடையாளம் காணப்பட்டவர்கின் எண்ணிக்கை 34,960 ஆக அதிகரித்துள்ளது.
7 வெளிநாட்டினர் உட்பட 8,573 பேர் தற்போது 65 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று, 582 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29,882 ஆக உயர்ந்தது.
கொரோனா சந்தேகத்தில் 536 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.


















