இலங்கையின் நேற்று 592 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 588 பேர் மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். சிறைகளில் இருந்து 18 பேரும், வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 4 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
அதன்படி நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 39,231 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30,568 ஆக உயர்ந்தது. 686 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.
8,478 நோயாளிகள் தற்போது 64 சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 462 நபர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.


















