நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இத்தகவலை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் நேற்று மேலும் 588 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ள நிலையில், அவர்களுள் 388 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும், ஏனைய 18 பேரும் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நாட்டில், கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளதுடன் 686 பேர் நேற்றைய தினம் (24) குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 30 ஆயிரத்து 568 பேர் குணமடைந்துள்ளனர். இலங்கையில் கொரோனாவால் மரணித்தோரின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது.



















