கொரோனா காரணமாக வெளி நாடுகளில் சிக்கி இருந்த 221 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.
அதன்படி, அவுஸ்திரேலியாவிலிருந்து 193 பேர் , ஜப்பானி லிருந்து 07 மற்றும் கட்டாரிலிருந்து 21 பேரும் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்ததாகத் தெரிய வந்துள்ளது.
நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கிடையில் மேலும் 415 பேர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 287 பேர், மாலத்தீ விலிருந்து ஒருவர், இந்தியாவிலிருந்து 27 பேர், மலேசியாவிலிருந்து 12 பேர் , சீனாவிலிருந்து 77 பேர் மற்றும் சிங்கப்பூரிலிருந்து 11 பேர் வருகை தரவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.




















