பொலிஸாரின் வருடாந்திர இடமாற்றங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2021 ஜனவரி 15 ஆம் திகதி திட்டமிடப்பட்ட இந்த இடமாற்றங்கள் மார்ச் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகளை பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரட்ன நேற்று பிறப்பித்தார்.




















