நேற்று நாட்டில் 551 கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளனர். இதன்மூலம், நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 39,782 ஆக உயர்ந்தது.
புதிய தொற்றாளர்களில் 541 பெர் மினுவாங்கொட – பேலியகோடா கொரோனா கொத்தணியுடன் தொடர்புகளாக அடையாளம் காணப்பட்டனர். அதே நேரத்தில் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 10 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியில் இதுவரை 36,099 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மூன்று வெளிநாட்டு பிரஜைகள் உட்பட 8,258 பேர் தற்போது நாடு முழுவதும் 65 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று 771 பேர் குணமடைந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31,399 ஆக உயர்ந்தது.
கொரோனா சந்தேகத்தில் 432 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.



















