வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் முக்கிய அரசியல் கூட்டணியாக திகழும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் மீண்டும் முரண்பாடுகள் தோன்றியுள்ளன.
ஊடகப்பேச்சாளர் பதவி மற்றும் நாடாளுமன்ற கொறடா ஆகிய பதவிகளை மையப்படுத்தி இந்த முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக கட்சியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் கூறுகின்றன.
இவ்வாறு கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் உட்பூசல்கள், பங்காளிக்கட்சிகளின் தலைமைகள் வெளியிட்ட விமர்சனங்கள் மற்றும் அவர்களது எதிர்பார்ப்புகள் குறித்த சிறப்பு பார்வையோடு வருகிறது இக்காணொளி,



















