இலங்கையின் வானிலையில் வடக்கு, வட-மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றிரவு முதல் ஓரளவிற்கு மழை வீழ்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இலங்கை வானிலை அவதான மையம் இதனை தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, வட-மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது பல மழை பெய்யும்.
சபரகமுவ மாகாணத்தில் ஒரு சில இடங்களிலும், களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
கடல் பகுதிகளில் மன்னார் முதல் பொத்துவில் வரை காங்கேசந்துறை மற்றும் திருகோணமலை கடல் பகுதிகளில் மழை பெய்யும்.
கொழும்பு முதல் புத்தளம் வழியாக காங்கேசந்துறை வரை உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் 50 முதல் 55 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என்றும் வாலை மையம் எதிர்வுகூறியுள்ளது.