ஹொரவப்பொத்தான பொலிஸ் பிரிவில் உள்ள ஒலுகடவல கிராமத்தில் வசித்த 3 பிள்ளைகளின் தாயாரான 36 வயதான பெண்ணும், முந்தல் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மஹிந்தலையை சேர்ந்த 26 வயதான திருமணமாகாத யுவதியும் காணாமல் போயிருந்தனர் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு, ஜனவரி 31 ஆம் திகதி. இரவு 11 மணிக்கு பொலிஸ் நிலையங்களிற்கு ஒரு செய்தி பரிமாறப்பட்டது.
அப்போதைய பதில் பொலிஸ்மா அதிபர் சி.டபிள்யூ. டி. விக்ரமரத்ன, வட மத்திய மாகாணத்தின் மூத்த டி.ஐ.ஜி.நந்தன முனசிங்கவிடம், காணாமல் போன இரண்டு பெண்கள் குறித்து உடனடியாக விசாரணைகளைத் தொடங்குமாறு அறிவுறுத்தினார்.
அதன்படி, அனுராதபுர பிரிவுக்கு பொறுப்பான எஸ்.பி. கீர்த்தி லங்கா கீகனேஜின் முழு மேற்பார்வையில், அனுராதபுர பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமை ஆய்வாளர் பண்டார விஜகோன் தலைமையிலான பொலிஸ் குழு காணாமல் போன
இரண்டு பெண்கள் தொடர்பான விசாரணைகளை தொடங்கியது.
பொலிசாரின் விசாரணையில், காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் ஓரினச்சேர்க்கையாளர் என்ற விடயம் வெளியானது.
அவரது அதீத ஓரினச்சேர்க்கை ஆர்வத்தினால் ஏற்கனவே 3 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. அத்துடன், அவரது மொபைல் சிம்மிற்காக சரியான அடையாள அட்டை சமர்க்கப்பட்டிருக்கவில்லையென்பதும் தெரிய வந்தது.
பொலிசாரின் தொடர் விசாரணையில் குறிப்பிட்ட வங்கிக்கணக்கொன்றை பற்றிய தகவல்கள் கிடைத்தது. அது கண்டியிலுள்ள வங்கியென்பது தெரிய வந்தது.
அந்த வங்கிக் கணக்கிற்கு யுவதியினுடையதென பொலிசார் கருதிய வங்கிக் கணக்கிற்கு மாதாந்தம் பணம் வைப்பு செய்யப்பட்டு வந்தது.
அந்த நிறுவனத்தைப் பற்றிய விசாரணையில், அது கண்டி, பல்லேகலையிலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றிலிருந்து வைப்பு செய்யப்பட்டது தெரிய வந்தது.
அந்த ஆடைத் தொழிற்சாலைக்கு பொலிசார் சென்றபோது, காணாமல் போன 3 பிள்ளைகளின் தாயும், பொலிஸ் யுவதியும் அங்கு பணியாற்றி வந்தது தெரிய வந்தது.
இருவரையும் பொலிசார் காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.
இதன்போது, பல தகவல்கள் வெளியாகின. பொலிஸில் இணைவதற்கு முன்னர், யுவதி மிஹிந்தலையிலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றினார்.
அப்போது, 3 பிள்ளைகளின் தாயாரான பெண்ணுடன் காதல் வசப்பட்டிருந்தது தெரிய வந்தது. அப்போதிருந்து இருவரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்தனர்.
26 வயதான யுவதி பொலிஸ் சேவையில் இணைந்த பின்னர் 3 திருமணமான பெண்களுடன் உறவில் இருந்துள்ளார். இதனால் அந்த குடும்பங்களிலும் சிக்கல்கள் உருவாகின.
இதன்பின்னர், தனது முதலாவது இணையான ஹொரவப்பொத்தான பெண்ணுடன் மீண்டும் இணைந்துள்ளார். 11 மாதங்களின் முன்னர் இருவரும் ஓடிப்போய், கண்டியில் வாழ்க்கையை ஆரம்பித்தனர். மடவள நகரில் வாடகை வீடொன்றை பெற்று, ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர்.
பொலிஸ் நிலையத்திற்கு ஹொரவப்பொத்தான பெண்ணின் கணவரும், 3 குழந்தைகளும் வரவழைக்கப்பட்டனர். அவர்களுடன் மீள இணையும்படி அந்த பெண்ணிடம் பொலிசார் கோரினர்.
எனினும், கணவன்-பிள்ளை என்ற வாழ்க்கை முறையை விட, பொலிஸ் யுவதியுடனான வாழ்க்கை முறை தனக்கு பிடித்துள்ளதால், அந்த வாழ்க்கையே வாழப் போகிறேன் என தெரிவித்துள்ளார். கணவன், பிள்ளைகள் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் கேட்கவில்லை.
அதேபோல, பொலிஸ் யுவதி தனது பொலிஸ் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைத்து, மீள இனிமேல் பொலிஸ் சேவையில் இணைய மாட்டேன் என்றார்.
அவரை தம்முடன் வருமாறு, அவரது தந்தை கண்ணீர் மல்க கேட்டார். எனினும், யுவதி அதை மறுத்து, காதலியுடன் வாழப் போவதாக கூறினார்.
பொலிசார் எவ்வளவோ முயன்றும், இருவரையும் குடும்பங்களுடன் இணைக்க முடியவில்லை.
இதையடுத்து, அவர்களை விடுவித்து விசாரணையை பொலிசார் முடித்தனர். யுவதி பொலிஸ் சேவையிலிருந்து விலக்கப்பட நடவடிக்கையெடுக்கப்படுகிறது.
அனுராதபுர பிரிவுக்கு பொறுப்பான எஸ்.பி. கீர்த்தி லங்கா கீகனேஜின் முழு மேற்பார்வையில், அனுராதபுர பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமை ஆய்வாளர் பண்டார விஜகோன் வழிகாட்டுதலின் கீழ் புலனாய்வு பிரிவு எண் 01 இன் இன்ஸ்பெக்டர் பி.எஸ்.சந்திரசிறி, பொலிஸ் சார்ஜென்ட் நிஷாந்த (37058), கான்ஸ்டபிள்ஸ் ராஜரத்ன (68954) சதுரங்க (12408), மதுசங்க (29287) ஆகியோர் இந்த விசாரணைகளை நடத்தினர்.