நாட்டில் நேற்று 598 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
நேற்றும் கொழும்பிலிருந்தே அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். கொழும்பில் 235 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். கம்பஹாவிலிருந்து 164 பேர், களுத்துறையிலிருந்து 84 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
நேற்று கொழும்பு மாவட்டத்தில் இருந்து அடையாளம் காணப்பட்ட 235 கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் 150 பேர் அவிசாவளையில் அடையாளம் காணப்பட்டனர்.
கம்பஹாவிலில் அடையாளம் காணப்பட்டர்களில், 56 பேர் நீர்கொழும்பை சேர்ந்தவர்கள். பேலியகொடவிலிருந்து 26 பேரும், பியகமவிலிருந்து 11 பேரும், ராகமவிலிருந்து 10 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.
நேற்று காலி மாவட்டத்தில் இருந்து 25 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 22 பேரும், அம்பாறை மாவட்டத்தில் இருந்து 20 பேரும், இரத்திளனபுரியில் இரந்து 17 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட ஏனைய ஒன்பது மாவட்டங்களிலிருந்தும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் கொழும்பு மாவட்டத்தில் இருந்து 17,317 Cதொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். கம்பஹாவிலிருந்து பேரும், களுத்துறையிருந்து 3,205 பேரும், கண்டி மாவட்டத்தில் இருந்து 1,463 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர்.