இலங்கையின் பல பகுதிகளில் தங்க சங்கிலி கொள்ளையடிக்கும் புதிய கும்பல் ஒன்று தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்களை இலக்கு வைத்து மாலை நேரங்களில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெறுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நேற்று நாட்டின் பல பகுதிகளில் சங்கிலி கொள்ளையடிக்கும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அனைத்து சம்பவங்களுக்கும் பெண்களே முகம் கொடுத்துள்ளனர். மாலை நேரங்களில் தங்க நகை அணிந்து செல்லும் பெண்கள் அவதானமாக செயற்பட வேண்டும்.
மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம நபர்கள் விலாசம் கேட்பது போன்று நடித்து சங்கிலிகளை பறித்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனிமையான வீதிகளில் நடந்து செல்லும் பெண்கள் தங்க நகைகளை அணிந்து செல்லவதனை தவிர்ப்பது நல்லதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.