அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் திரை அரங்குகளை மீண்டும் திறக்க புத்தசாசன மற்றும் கலாசார விவகார அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளார்.
சுகாதார வழிகாட்டுதலின் அடிப்படையில் மீண்டும் திரை அரங்குகளை திறப்பது குறித்து உறுதி செய்யுமாறு திரையரங்க உரிமையாளர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
அந்தவகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர, நாடு முழுவதும் உள்ள திரை அரங்குகள், 2021 ஜனவரி 1 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் பிற கலைஞர்களுடன் இடம்பெற்ற சமீபத்திய கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.