நாட்டில் கட்டமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் 24 குழுக்கள் தொடர்ந்தும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இதுவரை நாட்டில் 36 குழுக்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதில் பல குழுக்கள் செயலற்ற நிலையில் இருப்பதாகவும் பொலிஸார் பொதுப் பாதுகாப்பு அமைச்சருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட வன்முறைக் கும்பல்களில் சில உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் இருந்து செயற்பட்டு வருகின்றனர் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் குற்றவியல் சம்பவங்களில் ஈடுபடும் கும்பல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பொலிஸாருக்கு அறிவுறுத்தில் விடுத்துள்ளார்.