இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 191ஆக அதிகரித்துள்ளது.
இந்த விடயத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதன்படி புறக்கோட்டை, ராகம, கடவத்த மற்றும் வவுனியாவை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


















