தமிழகத்தில் மனைவி நெஞ்சு வலியால் உயிரிழந்துவிட்டதாக கணவன் அழுத நிலையில் அவர் நடத்திய அதிர்ச்சி நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியைச் சேர்ந்த தம்பதி பனிபிச்சை (36) மற்றும் மேகலா. இவர்களுக்கு 7-வயதில் மகனும் 5-வயதில் மகளும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 17-ம் திகதி மேகலா இரவு திடீர் நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாக மேகலாவின் குடும்பத்தாருக்கு பனிபிச்சை தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் பனிபிச்சை கதறி அழுது கண்ணீர்விட்டு பொலிசாருக்கு தகவல் கொடுக்காமல் அவசர அவசரமாக மறுநாள் காலையிலேயே உடலை நல்லடக்கம் செய்துள்ளார்.
கேரளாவில் இருந்து வந்த மேகலாவின் அண்ணனுக்கு, பனிபிச்சை மீது சந்தேகம் இருந்து வந்ததாகக் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் சமீபத்தில் பனிப்பிச்சை தனது மகனிடம் கடிதம் ஒன்றை எழுதிக் கொடுத்து, அதை தனது மனைவியின் அக்காள் மகளான 16-வயது சிறுமியிடம் கொடுக்கச் சொன்னார்.
அந்த கடிதத்தை பார்த்த சிறுமி அதிர்ச்சியடைந்தார். அதில், செல்லம் செல்லம் என்று வரிக்கு வரி பிரியமாக அழைத்திருந்த பனிப்பிச்சை, சிறுமியை தான் காதலிப்பதாகவும் அவரை அடைய எண்ணியே சித்தி மேகலாவை அடித்துக் கொலை செய்து விட்டதாகவும் எழுதிருக்கிறார்.
அந்த சிறுமிக்காகவே தான் உயிரோடு இருப்பதாகவும், தனது குழந்தைகளுடன் சேர்ந்து நான்கு பேராக இனியாவது நன்றாக வாழலாம் என்றும் சிறுமியின் மனதை கெடுக்க நினைத்த பனிபிச்சை, இனியும் சின்னப் பிள்ளையாக இருக்காதே, நம்மை கடவுள் ஆசீர்வதிப்பார் பயப்படாமல் தன்னை காதலிக்க வேண்டும், நீ எனக்கு வேணும் செல்லம் எழுதியிருக்கிறார்.
இது குறித்து மேகலாவின் சகோதரர் அந்தோணியடிமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் பொலிசில் புகாரளித்தார்.
புகாரின் பேரில் பொலிசார் பனிபிச்சையிடம் விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளியானது.
தனது மனைவியின் உடன் பிறந்த மூத்த சகோதரியின் 16-வயதான மகளுக்கு ஓன்லைன் வகுப்பிற்கு இண்டர்நெட் இணைப்பு இல்லாத நிலையில், அவர் சித்தி மேகலா வீட்டிற்கு தினமும் வந்து வைஃஃபை உதவியுடன் பாடம் படித்துச் சென்றுள்ளார்.
அப்போது பனிபிச்சை அந்த சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டார். இந்த சூழலில் மனைவி மேகலாவிற்கு பனிபிச்சை மீது சந்தேகம் ஏற்ப்பட்டுள்ளது.
தனது செய்கைகளுக்கு அவர் இடையூறாக இருப்பதாக எண்ணிய பனிப்பிச்சை மனைவியை அடித்து கொலை செய்திருக்கிறார் என தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து பொலிசார் பனிபிச்சையை கைது செய்துள்ளனர்.