எமது பொறுமையை பரிசோதித்து பார்க்க முயற்சிக்க வேண்டாம். அமைதியாக இருப்பதை கோழைத்தனம் என கருத வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
ஒரே நாடு ஒரே சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்பட வேண்டும் எனவும் ஒவ்வொரு தரப்பினருக்கு தேவையான வகையில் சட்டத்தை மாற்ற தேவையில்லை.
எமது பொறுமையை பரிசோதித்து பார்க்க முயற்சிக்க வேண்டாம். அமைதியாக இருப்பதை கோழைத்தனம் என கருத வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
ஒவ்வொரு அரசியல் அணிகளின் தேவைக்கு அமைய அதிகாரங்களை மேற்கோள்காட்டி நடப்பதற்கு தொடர்ந்தும் இடமளிக்க முடியாது.
மக்கள் மிகவும் கஷ்டமான நிலைமையில் இருக்கும் போது மாகாண சபைத் தேர்தலை நடத்தும் தேவை இருக்கின்றதா?, தொழில் இன்றி இருக்கும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுக்கு தொழிலை வழங்குவதற்காக நடத்தப்படும் இந்த மாகாண சபைத் தேர்தல் அவசியமற்றது எனவும் எல்லே குணவங்ச தேரர் குறிப்பிட்டுள்ளார்.



















