ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை பகுதியில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து கனரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை வலபனையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கனரக வாகனமே கினிகத்தேனை பிட்டவல பகுதியில் களனி ஆற்றிற்கு நீர் வழங்கும் ரம்புக்பத் ஓயாவில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
சாரதியின் கட்டுப்படை இழந்து வாகனம் விபத்திற்குள்ளானதுடன்,சாரதி மற்றும் நடத்துனர் காயமுற்ற நிலையில் நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.



















